/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : நவ 01, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.கரூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 58. இவர் கடந்த, 27ல் பஜாஜ் சி.டி.,- 100 பைக்கில், திருமாநிலையூர்-சுக்காலியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்த பன்னீர் செல்வத்துக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, பன்னீர் செல்வம் மனைவி வசந்தா போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

