/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி முகாம்
/
வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி முகாம்
ADDED : நவ 01, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், வட கிழக்கு பருவ மழை ஒத்திகை பயிற்சி முகாம் தனியார் பள்ளியில் நடந்தது.
அதில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடையும் போது, காவிரியாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறைகள், முதலுதவி சிகிச்சை அளிப்பதன் அவசியம், வீடுகளில் வெள்ளம் புகுந்து கொண்டால், பொதுமக்களை மீட்கும் முறைகள், கட்டடங்களில் தஞ்சம் புகுந்தவர்களை அழைத்து வரும் முறைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காட்டினர். முகாமில், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

