தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : அக் 23, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுாரில் டூவீலரை வளைக்க முயன்ற போது, கீழே விழுந்தவர் உயிரிழந்தார்.

அரவக்குறிச்சி அருகே வடக்கு நாகம்பள்ளி, ஆதிதிராவிட தெருவை சேர்ந்தவர் தங்கவேல், 75, நாகம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன், 50. இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில், மலைக்கோவிலுாரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை தங்கவேல் ஓட்டினார். தகர கொட்டகை அருகே சென்ற போது, பைக்கை வளைக்க முற்பட்டதால், பின்னால் அமர்ந்திருந்த பாஸ்கரன் நிலை தருமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரனை மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us