ADDED : அக் 31, 2026 07:14 AM

கரூர்:கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், மாரத்தான் ஓட்டம் நடந்தது.
தமிழக
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த, 26 முதல்
வரும் நவ., 1 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,
பொதுமக்களிடையே லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த,
பல்வேறு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு
வருகின்றன. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், நேற்று காலை நடந்த
மாரத்தான் ஓட்டத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி
கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.
பிறகு, கரூர் நகரின் முக்கிய
வீதிகள் வழியாக நடந்த மாரத்தான் ஓட்டம், மீண்டும் திருவள்ளுவர்
மைதானத்தை அடைந்தது. மாரத்தான் ஓட்டத்தில் ஊழல் தடுப்பு பிரிவு
டி.எஸ்.பி., ஜான், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் பள்ளி,
கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
