தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : அக் 31, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 07:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா நிர் பாரத் (பயறு வகைகளில் தன்னிறைவு இயக்கம்) திட்டத்தின் கீழ் வெஞ்சமாங்கூடலுார் மேற்கு கிராமத்தில், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தலைமை வகித்தார். பயிற்சியில், தினசரி உணவில் பயறு வகைகளின் முக்கியத்துவம், சாகுபடி முறைகள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் உளுந்து செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு, ரூ.10,000 மதிப்புள்ள வேளாண் இடு பொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. உயர்தர உளுந்து ரகம் வம்பன் 11 விதைகள், 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வேளாண்மை அலுவலர் கவுதமி, துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மற்றும் 2 சதவீத டிஏபி கரைசலை பூ பிடிக்கும் தருணம் மற்றும் அதிலிருந்து, 15 நாட்கள் கழித்து பின் என இரு முறை இலைவழி தெளிப்பதன் மூலம் பயிர் வகைகளில், 20 முதல் 30 சதவீத மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினார்.

மேலும் வேளாண்மையின் இதர திட்டங்கள் குறித்து, உதவி வேளாண்மை அலுவலர் விஜயா விளக்கம் அளித்தார். பயிற்சியில், 30 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us