/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூக்குத்தி திருடிய முகமூடி கொள்ளையர்களுக்கு வலை
/
மூக்குத்தி திருடிய முகமூடி கொள்ளையர்களுக்கு வலை
ADDED : நவ 17, 2025 03:45 AM
கரூர்: கரூர் அருகே, முகமூடி கொள்ளையர்கள், இரண்டு பேர், ஒரு கிராம் தங்க மூக்குத்தியை திருடி சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டம், புலியூர் வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா, 50; இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, முகமூடி மற்றும் ஜட்டி மட்டும் அணிந்திருந்த அடை-யாளம் தெரியாத, இரண்டு பேர், மல்லிகா வீட்டில் புகுந்து பெட்-டியில் இருந்த, ஒரு கிராம் தங்க மூக்குத்தியை திருடி சென்றனர். இதுகுறித்து, மல்லிகா அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீ
சார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முகமூடி கொள்ளையர்கள், இரண்டு பேர், ஜட்டி அணிந்து கொண்டு, புலியூர் வெள்ளாப்பட்டியில் பல வீடுகளில் புகுந்து செல்லும், 'சிசிடிவி' கேமரா காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த காட்சிகளை வைத்து, முகமூடி கொள்ளை-யர்களை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

