/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கல்
/
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கல்
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கல்
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கல்
ADDED : அக் 14, 2025 01:53 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவ மனையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். இந்நிறுவன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உட்கட்டமைப்பினை மேம்படுத்திட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், இங்கு, 15 லட்சம் ரூபாயில் கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு தேவையான உயர்தர மருத்துவ உபகரணங்கள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிர்மலாவிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.