மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 23, 2026 07:00 AM

கரூர்:கரூர்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், தமிழ்நாடு
மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
நிர்வாகி சக்தி தலைமை வகித்தார். கடந்த, 4 ஆண்டுகளாக
நிலுவையில் உள்ள இளநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வை, நீதிமன்ற
தீர்ப்பின்படி உடனடியாக வழங்க வேண்டும்.
ஏழு ஆண்டுகளாக பதவி
உயர்வுக்காக காத்திருக்கும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -ஆகியோருக்கு உடனடியாக பதவி உயர்வு
அளிக்க வேண்டும். அரசாணை எண் 131-ல் உரிய திருத்தங்கள் செய்து, நிர்வாக
ஊழியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை முறைப்படி
உறுதிப்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள,
சங்கத்தின் பிற கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் உள்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில துணைத்
தலைவர் கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்
ஜெயராம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மருந்தாளுநர் சங்க
மாவட்ட செயலாளர் சக்தி
வேல், வேளாண்மைதுறை சங்க மாநில செயலர் சங்கர், செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
