/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பலியான 2 பேருக்கு அமைச்சர் அஞ்சலி
/
கரூரில் பலியான 2 பேருக்கு அமைச்சர் அஞ்சலி
ADDED : செப் 29, 2025 02:02 AM
ஈரோடு:கரூரில் நேற்று முன்தினம் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 40 பேர் பலியாகினர். இதில் கொடுமுடி ஆவுடையார்பாறையை சேர்ந்த துரைசாமி மகன் சதீஷ்குமாரும், 34, ஒருவர். கரூர் ஹோட்டல் தொழிலாளி. திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். சக ஹோட்டல் தொழிலாளர், ஹோட்டல் உரிமையாளருடன் விஜயை பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளார்.
இதே போல் கொடுமுடி வெற்றிகோனார் பாளையத்தை சேர்ந்த முருகேசன் மனைவி ரேவதி, 50; இவருக்கு திருமணமான மகன், மகள் உள்ளனர். கணவர், மகனுடன் விஜயை பார்க்க சென்றபோது நெரிசலில் சிக்கி பலியானார். இருவரின் உடல் கொடுமுடிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் வீட்டுக்கு சென்ற, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, எம்.பி., செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராமசாமியும், அஞ்சலி செலுத்தினார்.