/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் 'மொபைல்' அனுமதியில்லை: கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் 'மொபைல்' அனுமதியில்லை: கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஓட்டு எண்ணும் மையத்தில் 'மொபைல்' அனுமதியில்லை: கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஓட்டு எண்ணும் மையத்தில் 'மொபைல்' அனுமதியில்லை: கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ADDED : மே 24, 2024 06:49 AM
கரூர் : ''ஒட்டு எண்ணும் மையத்தில் மொபைல் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துவர அனுமதியில்லை,'' என, கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் பேசினார்.
கரூரில், ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர், முகவர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:
கரூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4 காலை, 8:00 மணிக்கு தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் துவங்குகிறது.
ஓட்டு எண்ணும் மையத்தில் ஆஜராக முகவர்களுக்கான படிவம் எண் -18யை முறையாக பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பெற்று இருக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க இயலாது.
ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அன்று காலை, 7:00 மணிக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின் வருபவர்களை அனுமதிக்க முடியாது. மையத்தில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள், மொபைல் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துவர அனுமதியில்லை. மேலும் புகைப்பிடித்தல், மது அருந்தி விட்டு மையத்திற்குள் வருதல் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட, 5 ஓட்டு சாவடிகளில் பதிவான வாக்குகள் குறித்த விபரங்கள் விவிபேட் இயந்திரத்தில் விழுந்துள்ள துண்டுச் சீட்டுகள் வேட்பாளர் வாரியாக பிரித்து எண்ணப்படும். அந்த பணிகளையும் முகவர்கள் அமைதியான முறையில் பார்வையிடலாம். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், எஸ்.பி.,பிரபாகர், கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையது காதர், கூடுதல் எஸ்.பி.,பிரேம் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.