/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி வானிலை மையத்தை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
/
க.பரமத்தி வானிலை மையத்தை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
க.பரமத்தி வானிலை மையத்தை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
க.பரமத்தி வானிலை மையத்தை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ADDED : ஏப் 24, 2025 01:31 AM
கரூர்:க.பரமத்தியில் அமைந்துள்ள, வானிலை மையத்தை, கண்காணிப்பு பொறியாளர் ஆறுமுகம் நேரில் ஆய்வு செய்தார்.தமிழக அளவில், அதிகபட்சமாக வெயில் அளவு வேலுார், கரூர் மாவட்டத்தில் பதிவாவது உண்டு. க.பரமத்தியில் வானிலை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம், 39 செல்சியஸ் ( 102.1 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இதே நிலை நீடித்து வருகிறது. இன்னும், அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னதாக கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், 3 முதல் ஐந்து டிகிரி வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது குறித்து, க.பரமத்தி வானிலை மையத்தில், தஞ்சாவூர் நில மற்றும் நீர்வட்ட துறை கண்காணிப்பு பொறியாளர் ஆறுமுகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெயில் தாக்கம் குறித்தும், கடந்த ஆண்டு, 45 செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹுட்) வெப்பம் பதிவாகியிருந்ததையும் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, திருச்சி நில மற்றும் நீர்கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

