/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
/
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
ADDED : நவ 19, 2024 01:30 AM
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்
குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி
கரூர், நவ. 19-
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, கரூர் அருகில் புலியூர் வெங்கடாபுரம் நந்தினி,29; குழந்தையுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது, அலுவலக வளாகத்தில், அவர் குழந்தையுடன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின், அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக போலிசில் புகார் அளித்து, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தற்கொலை முயற்சி செய்ததாக கூறினார். பின்னர் கலெக்டரிடம் மனு வழங்க செய்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.