/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முத்து மாரியம்மன் கோவில் விழா அன்னப்பறவை வாகனத்தில் வீதி உலா
/
முத்து மாரியம்மன் கோவில் விழா அன்னப்பறவை வாகனத்தில் வீதி உலா
முத்து மாரியம்மன் கோவில் விழா அன்னப்பறவை வாகனத்தில் வீதி உலா
முத்து மாரியம்மன் கோவில் விழா அன்னப்பறவை வாகனத்தில் வீதி உலா
ADDED : ஏப் 04, 2024 04:45 AM
கரூர்: தான்தோன்றிமலை முத்து மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அன்னப்பறவை வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.
தான்தோன்றிமலை முத்து மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா, கம்பம் நடுதலுடன் கடந்த, 31ல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, அன்னப்பறவை வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை
வழிபட்டனர்.
இன்று பூச்சொரிதல் விழா, வரும், 7 ல் சிறப்பு கரக ஊர்வலம், 9ல் அலகு குத்துதல், கரகம் நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்குதல், 11ல் மாவிளக்கு ஊர்வலம், இரவு கம்பம் மற்றும் சிறப்பு கரகம் ஆற்றுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.