ADDED : அக் 31, 2026 07:12 AM

கரூர்:கரூர்
மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் சங்கம் சார்பில், சுதந்திர
போராட்ட தியாகி முத்து ராமலிங்க தேவர் குரு பூஜை விழா நடந்தது.
அதில், கரூர் ஜவஹர் பஜார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை முன், வைக்கப்பட்டிருந்த, முத்துராமலிங்க
தேவர் உருவப்படத்துக்கு, நேற்று மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் தர்மலிங்கம்,
ஓம்சக்திசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மனோகரா கார்னரில், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி சார்பில், முத்துராமலிங்க
தேவர் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை
செலுத்தப்பட்டது. அதில், மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்ட,
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* தோகைமலை பஸ் ஸ்டாண்ட் முன், மூவேந்தர்
முன்னேற்ற கழகம் சார்பில், தியாகி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா
கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். கரூர்
மாவட்ட செயலாளர்
சக்திவேல், விவசாயிகள் மறுவாழ்வு அறக்கட்டளை
இயக்குனர் நாகராஜ், இளைஞரணி தலைவர் ஆவின் மணி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மாவட்ட தலைவர் மொசைக் மாணிக்கம் பங்கேற்று, தேவர் படத்துக்கு
மலர் துாவி மரியாதை செய்தார்.
