ADDED : ஜூலை 25, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
கரூர்:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
அதில், 2025-26ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட முகாம், புகழூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
அதில், பங்கேற்ற மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு
அலுவலர் யுவராஜா பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி
தலைமையாசிரியர் விஜயன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன்,
உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி, ஆசிரியர்கள் மனோகரன்,
மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
