/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைப்பு சாரா தொழிலாளர்
கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கரூர், நவ. 15-
கரூர், வெண்ணைமலை தொழிலாளர் நல அலுவலகம் முன், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இணை செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மத்திய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின், தொழிலாளர் நல வாரியம் முறையாக செயல்பட வேண்டும். அது முடங்காமல் காத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாநில செயலாளர் கலா உள்பட பலர் பங்கேற்றனர்.