/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்- 100வது சிறப்பு நிகழ்ச்சி
/
வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்- 100வது சிறப்பு நிகழ்ச்சி
வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்- 100வது சிறப்பு நிகழ்ச்சி
வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்- 100வது சிறப்பு நிகழ்ச்சி
ADDED : நவ 12, 2024 07:00 AM
கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் - 100வது நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு முறையி-லான கற்பித்தல் செயல்பாட்டில், மாணவர்கள் நேரடியாக ஈடு-பட்டு கற்றலை மேற்கொண்டு வருகின்றனர். 2024--25ம் கல்வி-யாண்டில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி தொடங்கி 100வது நாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்கள் தனிநபர், இருவர் குழு, சிறு குழு, பெரிய குழு பாடல்கள், 100 குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடுதல், மேடையில் பேசுதல், நடித்தல், ஆங்கிலத்தில் உரையாடுதல், விளையாட்டின் வழி எண் மதிப்பு, இட மதிப்பு அறிதல், மொழி விளையாட்டில் ஈடுபடுதல், கதை கூறுதல், புதிர்கள், பழமொழிகள், படம் வரைதல் என பல்வேறு செயல்பாடுகளை செய்து காண்பித்தனர். மாணவர்களுக்கு 'ஹண்ட்ரட் டேய்ஸ் பிரைட்டர்' என்ற சான்றி-தழும், பதக்கமும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறன் மாணவர்க-ளுக்கு ஏற்ற, செயல்பாடுகளை வடிவமைத்து கலந்து கொண்-டனர். ஒவ்வொரு வகுப்பிலும், 20 செயல்பாடு என, ஐந்து வகுப்-புகளுக்கு, 100 செயல்பாடுகள் மேற்கொண்டு, ஒரு வகுப்பு செயல்பாடுகளை மற்ற வகுப்பு மாணவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மனோகர், மகேஸ்வரி, வாசுகி, சசிகலா , வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

