/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
/
டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ADDED : அக் 22, 2024 01:18 AM
டூவீலரில் இருந்து விழுந்த
மூதாட்டி உயிரிழப்பு
அரவக்குறிச்சி, அக். 22-
அரவக்குறிச்சி, பொன் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ரத்தினம்மாள், 69. இவரது மகள் ஜோதி, 40. ஜோதியின் மகன் கார்த்தி, 20. கடந்த, 5ம் தேதி அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில், கார்த்தி தனது பாட்டி ரத்தினம்மாளை டூவீலரில் அழைத்து சென்றார்.
அரவக்குறிச்சி அருகே கரடிப்பட்டி பகுதியில் சென்றபோது அங்கு இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கும் போது வாகனம் தடுமாறி. கீழே விழுந்து ரத்தினம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த ரத்தினம்மாள், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி போலீசார், கார்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.