/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் காயம்
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் காயம்
ADDED : நவ 09, 2024 04:03 AM
அரவக்குறிச்சி: .அரவக்குறிச்சி அருகே உள்ள எலவனுார், சின்னமேடு பகு-தியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 64. இவர் டூவீலரில் சின்னதாராபு-ரத்திலிருந்து, கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் ராஜபுரம் பிரிவு அருகே சென்றபோது, கரூர் மாவட்டம் மக்கள் பாதை அருகே உள்ள தெற்கு தெருவை சேர்ந்த அலாவுதீன், 44, என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர் சுப்பிரமணி ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சுப்பிரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். சின்ன தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.