ADDED : ஆக 13, 2026 06:20 AM

அரவக்குறிச்சி:க.பரமத்தி
வட்டார வேளாண்மை துறையின் கீழ், அட்மா திட்டத்தில் அறுவடைக்கு பின்
உள்ள மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக,
விவசாயிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்னிலை
கிழக்கு, அம்மாபட்டியில் க.பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்
ஸ்ரீபிரியா தலைமையில், அட்மா திட்டத்தில் அறுவடைக்கு பின் உள்ள
மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக விவசாயிகளுக்கான
ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறையில் உள்ள
திட்டங்கள், மானிய விலையில் உள்ள இடுபொருட்கள், மத்திய மற்றும் மாநில
திட்டங்களுக்கு மிக முக்கியமான விவசாய அடையாள எண்ணின்
முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஸ்ரீபிரியா பேசினார்.
விவசாயிகள்
மண்வளத்தினை காத்திடவும், அதிகப்படியான உர பயன்பாட்டினை
தவிர்த்திட மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண்மை
துறையின் திட்ட செயல்பாடுகள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர்கள்
எடுத்துரைத்தனர்.
க.பரமத்தி வட்டார முன்னோடி விவசாயி
செல்வராஜ், முருங்கையில் மதிப்பு கூட்டுதல் மற்றும் இயற்கை வேளாண்மை
குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை
துறையில் உள்ள திட்டங்களான இடுபொருள் உலர் கலன் அமைத்தல், முருங்கை
மதிப்பு கூட்டுதல், மையம் அமைத்தல், குழு அமைத்தல் குறித்து பேசினார்.
பயிற்சியில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
