தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாநில அளவிலான கேரம் போட்டிக்கு மாணவி தேர்வு

மாநில அளவிலான கேரம் போட்டிக்கு மாணவி தேர்வு

மாநில அளவிலான கேரம் போட்டிக்கு மாணவி தேர்வு


ADDED : ஆக 13, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவி, மாநில அளவிலான கேரம் போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார்.

கரூர் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கரூர், குளித்தலை, தாந்தோன்றிமலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் வட்டங்களில் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்

பங்கேற்றனர்.

இதில், 19 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி ஹர்ஷினி பிரியா முதல் போட்டியில், தாந்தோன்றிமலை குறுவட்டத்தை சேர்ந்த பி.ஏ வித்யாபவன் பள்ளி மாணவியை எதிர் கொண்டு வெற்றி பெற்றார்.

இரண்டாவது போட்டியில், குளித்தலை குறுவட்டத்தை சேர்ந்த மவுண்ட் கிரீஸ் பள்ளி அணியை எதிர்கொண்டு, வெற்றி பெற்றார். இறுதி போட்டியில் கரூர் குறுவட்டத்தை சேர்ந்த பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை எதிர்கொண்டு வெற்றி பெற்று மாவட்ட அளவில் ஒற்றையர் கேரம் போட்டியில், முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவியை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜூதீன், பள்ளப்பட்டி எஜூகேஷன் சொசைட்டி செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து

தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us