ADDED : நவ 03, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், நெரூர் வடக்கு கிராமத்தில், மண்வள மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
அதில், மண்வளம் மேலாண்மை குறித்து, வேளாண்மை உதவி இயக்குனர் காதர் மொய்தின், பயிர் காப்பீடு குறித்து வேளாண்மை அலுவலர் பன்சுர பேகன், எல் நினோ, மண் மற்றும் நீர் மாதிரி எடுப்பது குறித்து, வேளாண்மை அலுவலர் கலைசெல்வன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர். பயிற்சியில், வேளாண்மை பல்கலைகழக உதவி பேராசிரியர் பத்மாவதி, உதவி தொழி ல்நுட்ப மேலாளர்கள் சுரேஷ், நந்தினி மற்றும் விவசா-யிகள் பங்கேற்றனர்.
