/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
/
அரவக்குறிச்சி அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ADDED : நவ 16, 2024 01:25 AM
அரவக்குறிச்சி அருகே கார்
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி, நவ. 16-
அரவக்குறிச்சி அருகே, சென்டர் மீடியனில் கார் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் என்.எஸ்.டி., காலனியை சேர்ந்தவர் சாய் பிரவீன், 31, இதே பகுதியை சேர்ந்தவர் சொர்ணகுமார், 33. இவர்களது நண்பர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை நகரை சேர்ந்த தினகரன், 30. இவர்கள் மூவரும், பொலிரோ காரில் கரூரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அரவக்குறிச்சி அருகே இந்திராநகர் பகுதியில் வந்த போது, வேகமாக காரை இயக்கியதால்
கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சொர்ணகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தினகரனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சாய் பிரவீனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.