ADDED : நவ 18, 2026 07:19 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெண்டைக்காய் விலை சரிந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி,
கணக்கம்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், பாப்பகாப்பட்டி,
மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதி களில் விவசாயிகள் வெண்டைக்காய்
சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக,
விலை சரிந்து விற்பனை நடந்து வருகிறது.
கரூர், குளித்தலை, முசிறி ஆகிய
பகுதிகளில் செயல்படும் உள்ளூர் வாரச்சந்தைகளில் வெண்டைக்காய்
விற்கப்படுகிறது. கடந்த வாரம் வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு
விற்றது, நேற்று 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்து
விற்கப்பட்டதால் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்துள்ளது.
