/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையோரம் திறந்த கிணறுகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்
/
நெடுஞ்சாலையோரம் திறந்த கிணறுகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்
நெடுஞ்சாலையோரம் திறந்த கிணறுகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்
நெடுஞ்சாலையோரம் திறந்த கிணறுகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்
ADDED : அக் 17, 2024 01:23 AM
நெடுஞ்சாலையோரம் திறந்த கிணறுகள்
வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்
கரூர், அக். 17-
நெடுஞ்சாலையோரம் உள்ள திறந்த வெளி கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. விபத்து ஏற்படுவதற்கு முன், கிணறுகளை மூடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தேசிய மற்றும் நெடுஞ்சாலை ஓரத்தில் திறந்தவெளி கிணறுகளில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. கிணறுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில் மட்டும், சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத சாலையோர கிணறுகள் மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான இடங்களில் கிணறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். கரூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் திறந்த வெளி கிணறுகள் உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் செல்லும், மாநில நெடுஞ்சாலையோரம் கிணறுகள் உள்ளன. இந்த சாலை வழியாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையிலிருந்து பள்ளமான பகுதியில், முள் புதர்கள் நிறைந்த கிணறு உள்ளதால், வாகனங்கள் தடுமாறி விழுந்து விடும். இரவு நேரங்களில், அதிவேகமாக அவ்வழியே செல்லும் வாகனங்கள், கிணறுகளில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. தடுப்புச்சுவர் கட்டாமல் இருக்கும் கிணற்றால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் காத்திருக்கிறது. சம்பந்தப்பட்டோர் மூலம் கிணறுகளை மூட, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன
ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.