/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகர்புற உள்ளாட்சி கடை வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு அமைக்க உத்தரவு
/
நகர்புற உள்ளாட்சி கடை வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு அமைக்க உத்தரவு
நகர்புற உள்ளாட்சி கடை வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு அமைக்க உத்தரவு
நகர்புற உள்ளாட்சி கடை வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு அமைக்க உத்தரவு
ADDED : ஆக 22, 2024 03:53 AM
கரூர் : நகர்புற உள்ளாட்சி கடைகளில், வாடகை பிரச்னையை தீர்க்க வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில், நகர்புற உள்ளாட்சிகளின் கடைகளை வாடகைக்கு விடுதல், காலி நிலத்தை குத்தகைக்கு விடுதல் ஆகிவற்றில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டும் என, வணிகர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என, மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணி, வாடகை ஒப்பந்த பத்திரம் பதிவு செய்தல், வாடகை நிர்ணயம் செய்தல், வைப்புத் தொகை பெறுதல், சொத்து மதிப்பு சான்றிதழ் பெறுவதற்கு பதில், வங்கி உத்திரவாத சான்றிதழ் பெறுதல், குத்தகை உரிம காலம் முடிவதற்கு முன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஏலம் போகாத குத்தகையினங்கள் குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
குத்தகை இனங்களில் ஆண்டுதோறும், 5 சதவீதம் உயர்வு செய்தல், புதிய வணிக பயன்பாட்டு கட்டடங்களில் குத்தகை காலம் முடிவுற்ற பின், வாடகை மறுநிர்ணயம் செய்வது. வழக்கு தொடரப்பட்டு நிலுவையிலுள்ள கடைகள், மாநகராட்சி, நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களை இடித்து புதிதாக கட்டும் போது, ஏற்கனவே குத்தகைதாரர், ஒப்படைப்பு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குத்தகை இனங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு, நகராட்சிகளுக்கு மண்டல அளவில் துணைக்குழுக்களும், மாநகராட்சிகளுக்கு, மாநகர அளவில் துணைக்குழுக்களும் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களில் நிலவும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு, தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.