/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நந்தன்கோட்டை பகுதியில் நெற் பயிர்களுக்கு பாதிப்பு
/
நந்தன்கோட்டை பகுதியில் நெற் பயிர்களுக்கு பாதிப்பு
ADDED : நவ 08, 2025 04:04 AM
கிருஷ்ணராயபுரம்: நந்தன்கோட்டை பகுதியில், பூச்சி தாக்குதல் காரணமாக நெற் பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து மகிளிப்-பட்டி, நந்தன்கோட்டை பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. கடந்த மாதம் வயல்களில் உழவு பணிகள் செய்-யப்பட்டது. இந்நிலையில், நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் முளைத்து வரும் நிலையில் பூச்சி தாக்குதல் மற்றும் பருவ நிலை காரணமாக வளர்ச்சி குன்றி நிறம் மாறி வருகிறது.
எனவே, நெற் பயிர்கள் மீண்டும் பசுமையாக வளர்ச்சி காணும் வகையில், வேளாண்மைத்துறை அலுவலர்கள் விவசாயிகளை நேரில் சந்திந்து, அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில், 20 ஏக்கரில் நெற் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

