/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை கடத்தி திருமணம் பெயின்டருக்கு 'போக்சோ'
/
சிறுமியை கடத்தி திருமணம் பெயின்டருக்கு 'போக்சோ'
ADDED : நவ 20, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சிறுமியை கடத்தி, திருமணம் செய்த பெயின்டர் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், காளியப்ப கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி தாமரைக்கண்ணன், 23; பெயின்டர். இவர், 2024 ஜூலை 16ல், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்த, 14 வயது சிறுமியை கடத்தி, சோமூர் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதில், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமானார்.
புகாரில், கரூர் போலீசார், தாமரைக்கண்ணன், உடந்தையாக இருந்த அவரது தந்தை கோவிந்தசாமி, 53, தாய் செல்வி, 50, உட்பட, ஆறு பேரை நேற்று முன்தினம் போக்சோவில் கைது செய்தனர். மேலும், குமார், 35, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

