/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமலை கோவில் திருத்தேர் பணி 'விறுவிறு'
/
பாலமலை கோவில் திருத்தேர் பணி 'விறுவிறு'
ADDED : டிச 31, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிதாக, திருத்தேர் செய்யும் பணி
விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி, பவித்திரம் பால மலையில் பிரசித்தி பெற்ற, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அதில் வரும், தைப்பூ-சத்தையொட்டி, 97 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக திருத்தேர் செய்யும் பணிகள், சில மாதங்களாக நடந்து வருகிறது.வரும், 5 காலை, 9:15 மணிக்கு கோவில் வளா-கத்தில் திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. அதற்காக, புதிதாக தேர் செய்யும் பணி விறுவி-றுப்பாக நடந்து வருகிறது.

