/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி மாணவியர் அணி மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு
/
பள்ளப்பட்டி மாணவியர் அணி மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு
பள்ளப்பட்டி மாணவியர் அணி மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு
பள்ளப்பட்டி மாணவியர் அணி மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு
ADDED : ஆக 15, 2025 02:32 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணியினர், மாவட்ட கபடி போட்டி யில் விளையாட தேர்வு பெற்றனர்.
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கபடி போட்டி சின்னதாராபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 14 வயது, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு கபடி போட்டியில் மாணவியர் அணியினர் குறுவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.