தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கழிவுநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

கழிவுநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

கழிவுநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதி


ADDED : நவ 04, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, சின்னதாராபுரத்தில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில், கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் பகுதியில் இருந்து, தென்னிலை செல்லும் சாலையில் தினமும் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்கள், கார்களில் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் உடைந்ததால், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதுடன், தொடர்ந்து வழிந்தோடு

கிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கழிவுநீரில் சறுக்கி, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உடைந்துள்ள கழிவுநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us