ADDED : நவ 14, 2026 07:00 AM

கரூர்:கரூர் அருகே, நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து, திருச்சி சாலையில் உள்ளது.
அதில், தனியார் சிமென்ட் ஆலை, பொறியியல் கல்லுாரி, அரசு மற்றும் தனியார்
பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், புலியூரில் இருந்து
திருச்சி, கரூர் மற்றும் மணப்பாறை பகுதிகளுக்கு பொது மக்கள்
நாள்தோறும் பஸ்களில் சென்று வருகின்றனர். ஆனால், புலியூரில் இரண்டு
பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை. கரூர் மாவட்டத்தில்,
வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து
வருகிறது. இந்நிலையில், புலியூரில் பஸ் ஸ்டாப்களில், நிழற்கூடம்
இல்லாததால், பொது மக்கள் மழை வரும் போதும், வெயிலின் தாக்கம் அதிகம்
உள்ள போதும், பஸ்கள் வரும் வரை அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகும் அவல
நிலை உள்ளது.
எனவே, புலியூரில் இர ண்டு பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்களில்
எம்.பி.,
அல்லது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதியின் கீழ், பயணிகள்
நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
