ADDED : அக் 22, 2026 07:23 AM

கரூர்:கரூர்
அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில்,
சேதம் அடைந்துள்ளது. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், நெரூர் தெற்கு கிராம பஞ்சாயத்து, மறவாப்பாளையம் பகுதியில்,
மக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், 4.25 லட்ச ரூபாய்
செலவில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதி மக்கள்
பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த கழிப்பிடத்தின் உள்பகுதி
சேதம் அடைந்துள்ளது. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி
அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால், கழிப்பிடத்தை
பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி
வருகின்றனர். இதனால், மறவாப்பாளையம் பகுதியில் தொற்று பரவும் அபாயம்
உள்ளது. எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள,
கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட, நெரூர் தெற்கு
பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
