/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை
/
க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : கரூர் - கோவை நெடுஞ்சாலையில், க.பரமத்தி கடை வீதி பகுதியில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரில் இருந்து, 18 வது கிலோ மீட்டரில் க.பரமத்தி உள்ளது.
நெடுஞ்சாலையையொட்டியுள்ள க.பரமத்தியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளது. மேலும், அப்பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளது. நாள்தோறும் க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ரோட்டை கடந்து செல்கின்றனர். அப்போது, கரூரில் இருந்தும், கோவையில் இருந்தும் வாகனங்கள் வேகமாக செல்வதால், ரோட்டை கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும்.