/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐந்து சாலையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை
/
ஐந்து சாலையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : செப் 23, 2024 04:34 AM
கரூர்: கரூர் அருகே, ஐந்து சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அருகே, வளர்ந்து வரும் பகுதியாக, ஐந்து சாலை உள்-ளது. மேலும், கரூரில் இருந்து ஐந்து சாலை வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனுார், வாங்கல், நெரூர், திருமுக்கூடலுார், பசு-பதிபாளையம், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, மேலப்பா-ளையம், கொளந்தானுார் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.இதனால், கரூர் ஐந்து சாலையில் போக்குவரத்து எப்போதும் பிஸியாகவே காணப்படும். கோடையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொது-மக்கள், பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைக்கா-லத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால், பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைகளை தேடி பொது மக்கள் ஓடும் நிலை உள்ளது. இதனால், கரூர் ஐந்து சாலை பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் வச-திக்காக, நிழற் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.