/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
/
குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
ADDED : மார் 05, 2024 12:22 PM
கரூர்: குடிநீர் உள்பட அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம் என, புலியூர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், புலியூர் அருகில் பி.வெள்ளாளப்பட்டியில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்பில், 288 வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். மூன்று ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால், தண்ணீர் கிடைக்கவில்லை.
குடிநீர் இல்லாமல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பணிக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் குடிநீருக்கு பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை உள்ளது. இப்பகுதியில் பஸ் வசதி இல்லாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எங்கள் பிரச்னைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.