/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு ரத்து செய்ய மனு
/
கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு ரத்து செய்ய மனு
ADDED : ஜூன் 10, 2025 12:56 AM
கரூர், கம்ப்யூட்டரில், தட்டச்சு தேர்வு நடத்தும் தொழிற்கல்வி இயக்ககத்தின் உத்தரவை, அரசு திரும்ப வேண்டும். தட்டச்சு மிஷின் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என, மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 5,000 தட்டச்சு, சுருக்கெழுத்து பள்ளிகள் அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. இதில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தேர்வுகள் தட்டச்சு இயந்திரம் மூலம் நடக்கிறது. 2025--26ம் ஆண்டுகளில் நடைபெறும் தேர்வுகள் தட்டச்சு இயந்திரத்தில் நடக்கும்.
அதன் பிறகு, 2027 முதல் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே தட்டச்சு தேர்வு நடத்தப்படும் என, தொழிற்கல்வி இயக்ககம்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த முடிவால் தட்டச்சு பொறி மெக்கானிக்குகள், அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் பலர் பாதிக்கப்படுவர். மேலும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படும். புதிய உத்தரவை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு இயந்திரங்கள் மூலம் மட்டுமே, தொழில் கல்வி இயக்ககம் தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.