/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர் பட்டியலில் முறையாக திருத்தம் செய்ய கோரி அ.தி.மு.க., சார்பில் கலெக்டரிடம் மனு

ADDED : டிச 08, 2024 01:58 AM
வாக்காளர் பட்டியலில் முறையாக திருத்தம் செய்ய
கோரி அ.தி.மு.க., சார்பில் கலெக்டரிடம் மனு
கரூர், டிச. 8-
'இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்து, சரியான முறையில் திருத்தம் செய்து வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்' என, அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், கரூர் கலெக்டர்
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 8.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்கள் என பல்வேறு நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில், இதுவரை நீக்கப்படாமலே உள்ளது. கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், இதுபோன்ற நபர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என மனுக்கள் அளிக்கப்பட்டன.
அதன்பின், பலமுறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும், இவர்களின் பெயர்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த வாக்காளர் பட்டியல் குளறுபடிகளுக்கு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணிகளை சரிவர மேற்கொள்ளாததே காரணமாகும். இது குறித்து புகார் அளித்தாலும் நேரடி கள ஆய்வு செய்து பெயர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும், வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் விபரங்களை வழங்க வேண்டும்.
வரும், 2025 ஜனவரியில் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் சரியாக திருத்தம் மேற்கொண்டு வெளியிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.