ADDED : அக் 16, 2026 07:09 AM

கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வில் உள்ள, தேக்க நிலையை உடனடியாக களைய வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பும் முடிவை கைவிட வேண்டும். பணியாளர்களை பணி
வரன்முறை செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்படும் மருந்துகளின் தரத்தை, பாதுகாக்கும் வகையில், வெப்ப
நிலையை கட்டுப்படுத்த தேவையான நவீன குளிர்சாதன கிடங்கு வசதி
களை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் சிவசண்முகம், முஸ்தபா, அறிவுச்செல்வி, குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
