/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளக்ஸ் போர்டு புதுசு, கட்டடம் பழசு; இடிந்து விழும் நிலையில் கழிப்பிடம்
/
பிளக்ஸ் போர்டு புதுசு, கட்டடம் பழசு; இடிந்து விழும் நிலையில் கழிப்பிடம்
பிளக்ஸ் போர்டு புதுசு, கட்டடம் பழசு; இடிந்து விழும் நிலையில் கழிப்பிடம்
பிளக்ஸ் போர்டு புதுசு, கட்டடம் பழசு; இடிந்து விழும் நிலையில் கழிப்பிடம்
ADDED : ஆக 28, 2024 07:41 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில், அபாயகர நிலையில் உள்ளது. ஆனால், நவீன கட்டண கழிப்பிடம் என, பிளக்ஸ் போர்டு மட்டும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 'ஏ' கிரேடு பெற்ற நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டு செயல்படுகிறது. தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூருக்கு நாள்தோறும், 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தொழில் நகராக உள்ள கரூருக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, வணிக வளாகம் சில ஆண்டுகளுக்கு முன் இடிக் கப்பட்டது.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் கட்ட ப்பட்ட கட்டண கழிப்பிடத்தை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தாமல் உள்ளது. குறிப்பாக, கட்டண கழிப்பிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டண கழிப்பிடத்தில், நவீன கட்டண கழிப்பிடம் என, புதிதாக பிளக்ஸ் போர்டை மட்டும் மாட்டி வைத்துள்ளனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டில், இடிந்து விழும் நிலையில் உள்ள, கட்டண கழிப்பிடத்தில் ஒரு நபருக்கு, 10 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். ஆனால், கட்டட பராமரிப்பு பணி மேற் கொள்ளாமல், கரூர் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. தற்போது, கரூர் நகரில் காற்று அதிகமாக வீசி வரும் நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால், இடிந்து விழும் நிலையில் உள்ள, கட்டண கழிப்பிடத்துக்கு செல்லும் பொதுமக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில், பல ஆண்டு களுக்கு முன் கட்டப் பட்ட கட்டண கழிப்பி டத்தை அகற்றி விட்டு, சில மாதங்களுக்கு முன் புதிதாக கட்டப்பட்டுள்ள, கழிப்பிட த்தை திறக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.