/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'சிசிடிவி' கேமரா செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும்
/
'சிசிடிவி' கேமரா செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும்
'சிசிடிவி' கேமரா செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும்
'சிசிடிவி' கேமரா செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும்
ADDED : டிச 24, 2025 09:26 AM
குளித்தலை: குளித்தலை சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில், குற்ற சம்பவங்களை தடுக்க வைக்கப்பட்ட 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
குளித்தலை, நங்கவரம் மற்றும் தோகைமலை போலீஸ் சரகத்தில் உள்ள கிராமங்களில், பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்து சார்பில், முக்கிய சாலை மற்றும் பொது இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதே போல் போலீசார் சார்பில், முக்கிய பிரிவு சாலைகள் மற்றும் குற்றச்சம்பங்கள் அடிக்கடி நிகழும் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். பழுது ஏற்பட்டிருந்தால், 'சிசிடிவி' கேமராக்களை சரி செய்ய வேண்டும்.