/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3.33 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
/
3.33 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
3.33 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
3.33 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 10, 2025 01:12 AM
கரூர், : கரூர் மாவட்டத்தில், 3.33 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ஆச்சிமங்கலம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, கலெக்டர் தங்க வேல் தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், மூன்று லட்சத்து, 33 ஆயிரத்து, 76 ரேஷன்அட்டைதாரர்களுக்கு, 408 முழு நேர ரேஷன் கடைகள், 229 பகுதிநேர ரேஷன் கடைகள் மற்றும் இரண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என மொத்தம், 637 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு து வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் நம்பர் மற்றும் குறிப்பிட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில் மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் கனகராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ஆறுமுகம், அருள்மொழி, பிச்சைவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.