/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ஆண்டாங்கோவில் பகுதியில் போஸ்டர்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ஆண்டாங்கோவில் பகுதியில் போஸ்டர்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ஆண்டாங்கோவில் பகுதியில் போஸ்டர்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ஆண்டாங்கோவில் பகுதியில் போஸ்டர்
ADDED : அக் 03, 2024 07:23 AM
கரூர்: கரூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரி-வித்து, ஆண்டாங்கோவில் பஞ்., பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த, 2021ல் கரூர் நகராட்சியை, மாநகராட்சி-யாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில், ஆண்டாங்கோவில் மேற்கு, ஆண்டாங்கோவில் கிழக்கு, காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்துார், கருப்பம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட திரு-மாநிலையூர் ஆகிய பஞ்சாயத்துகளை இணைக்-கும்படி, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்-டுள்ளது. இதில் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்-சாயத்தை இணைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளரு-மான விஜயபாஸ்கரின் தம்பி சேகர் மனைவி சாந்தி, பஞ்., தலைவராக இருந்து வருகிறார். கடந்த கிராம சபை கூட்டத்தில், மாநகராட்சி இணைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.
தற்போது, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., பகு-திகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசின் உதவிகள் பறிபோக வழி வகுக்கும், போராட துாண்டாதே ஆகிய வாசகங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.