ADDED : ஜூலை 05, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, பாத்ரூமில் தவறி விழுந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.
கரூர்
மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் நாகராஜன்,
44; தனியார் நிதி நிறுவன மேலாளர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, மது
அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின், வீட்டில் உள்ள
பாத்ரூமுக்கு சென்றபோது, நாகராஜன் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.அவரை
அருகில் இருந்தவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், செல்லும் வழியில்
நாகராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து, நாகராஜின் மனைவி அபிராமி, 38,
அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
