எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் வராததால் தயாரிப்பாளர்கள் கவலை
எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் வராததால் தயாரிப்பாளர்கள் கவலை
ADDED : அக் 29, 2026 03:25 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் இருந்து, எதிர்பார்த்த அளவில் வரும், 2027 ஆண்டுக்கான காலண்டர் ஆர்டர்கள் வரவில்லை என, தயாரிப்-பாளர், ஏஜென்ட்கள் கவலையில்
உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஜவுளி தொழில், கொசு வலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டும் தொழில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதத்திலேயே விருதுநகர் மாவட்டம், சிவ-காசியில் இருந்து மாத காலண்டர், தினசரி காலண்டர் மற்றும் டைரி தயாரிப்பாளர்கள், ஏஜென்ட்கள் கரூர் மாவட்டத்தில், முகா-மிட்டு ஆர்டர் பெறுவது வழக்கம்.
இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான காலண்டர், டைரிக்கு புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை என, தயாரிப்பா-ளர்கள், ஏஜென்ட்கள் கூறினர்.
இதுகுறித்து, அவர்கள்
கூறியதாவது:
சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கு, நாடு முழுவதும் மவுசு உண்டு. மேலும், கிழக்கு ஆசியா, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், சிவகாசி காலண்டர்களை வாங்குவர். இதனால், ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தில், ஆடி பெருக்கின் போது, மாதிரி காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு, ஆர்டர் பெற்று அச்சடிப்பு பணி துவங்கும். ஆனால், நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில், தொழில் நசிவு காரணமாக, 2027 ஆண்டுக்கான மாதிரி காலண்டர் ஆல்பத்தை, கடந்த ஆடிப்பெருக்கு நாளில் வெளியிட முடியவில்லை.
ஏற்கனவே கடந்தாண்டு காலண்டர் அச்சடிக்க ஆர்டர் கொடுத்த-வர்கள், நடப்பாண்டு, அமெரிக்காவின் வரி உயர்வு, தொழில் முடக்கம் காரணமாக ஆர்டர் கொடுக்க தயங்குகின்றனர். தீபா-வளி பண்டிகையையொட்டி, தமிழகம் மட்டுமின்றி பிற மாநி-லங்களில் இருந்தும், வாடிக்கையாளர்களுக்கு காலண்டர் வழங்க, ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவ-னங்களில், 80 சதவீதம் அளவுக்கு ஆர்டர் வரும். ஆனால் நடப்-பாண்டு, 50 முதல் 65 சதவீதம் வரை மட்டுமே ஆர்டர் வந்துள்-ளது. இதனால், சிவகாசியில் காலண்டர், டைரி அச்சிடும் பணி மந்தமாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்க-ளுக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு கூறினர்.
