/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
/
கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ADDED : அக் 25, 2024 01:06 AM
கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கிருஷ்ணராயபுரம், அக். 25-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாசி, மாயனுார், பஞ்சப்பட்டி, லாலாப் பேட்டை, கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம், மகாதானபுரம் ஆகிய இடங்களில் மாநில அரசின் திட்டமான, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தங்க வேல் தலைமையிலான, அரசு அலுவலர்கள் குழு நேற்று காலை முதல் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தங்கியிருந்து, அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுதல் ஆகியவை நடந்தது.
மாயனுார், அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுத்தப்படும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில், ஆசிரியர்கள் கற்பிக்கும் முறைகள், மாணவ, மாணவிகள் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பஞ்சப்பட்டியில் விவசாயி ஒருவரின் நிலத்தில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் அரசு மானியம் பெற்று கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலம் குறித்தும், மகாதானபுரத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு செடிகள் குறித்து கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வளர்ச்சி பணிகள் குறித்து, யூனியன் அலுவலக ஆய்வு கூட்டத்தில் பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள், யூனியன் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

