ADDED : செப் 27, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். பின் அவர் பேசுகையில், ''மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான, அனைத்து நல திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது,'' என்றார்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி, துணைத் தலைவர் வளர்மதி, தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.