/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
ADDED : அக் 24, 2024 01:11 AM
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
விலையில்லா சைக்கிள் வழங்கல்
அரவக்குறிச்சி, அக். 24-
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
எம்.எல்.ஏ., இளங்கோ பங்கேற்று, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு, 159 சைக்கிள்களையும், இதேபோல் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா மேல்நிலைப் பள்ளியில், 140 சைக்கிள்களையும் வழங்கினார். பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், பள்ளப்பட்டி தி.மு.க., நகர செயலாளர் வாஷிம் ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.