sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

/

முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : டிச 11, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: செட்டிபாளையம் தடுப்பணை பூங்கா முழுவதும், முட்புதர்க-ளாக மாறி விட்டதால், சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர் அருகே செட்டிபாளையத்தில், அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் மூலம் அப்பிபாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வச-தியும் கிடைத்தது. தடுப்பணையில் நீர்வீழ்ச்சி

போல் தண்ணீர் கொட்டுவதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்-றுலா பயணிகள், பார்வையிட வருகை

தருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், அப்பிபாளையம் பஞ்சாயத்து சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் ஊஞ்சல், சிங்கம், புலி, மான் உள்ளிட்ட வன விலங்கு

களின் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

தடுப்பணையை பார்வையிட்ட பின், பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், தொடர்ந்து பூங்கா சரி-யாக பராமரிப்பு இல்லாததால் முட்புதர்களாக மாறி விட்டது. அப்-பிபாளையத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தடுப்பணைக்கு வருகின்றனர்.

பொது மக்களின் வருகை தற்போது

அதிகரித்துள்ளதால், பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள்

எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us