/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 09, 2025 01:44 AM
கரூர், கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளதால், பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் பஞ்சாயத்து யூனியன், மி.பஞ்சமாதேவி கிராம பஞ்சாயத்து அரசு காலனியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக கடந்த, 2013-14ல், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், அரசு காலனி பகுதியில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை தொட்டி, சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அதன் மூலம், அரசு காலனி பகுதியில் உள்ள, வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி தற்போது, சேதமடைந்துள்ளது. குறிப்பாக, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளது. இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.